பிரித்தானியாவிலுள்ள பழம்பெரும் பொக்கிஷங்களை மீட்க போராடும் இந்தியா! தொடரும் அச்சுறுத்தல்
பிரித்தானியாவிலுள்ள இந்தியாவின் பழம்பெரும் பொக்கிஷங்களை திரும்ப தருமாறு, இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவின் பழம்பெரும் பொக்கிஷங்கள்
இந்தியாவை ஆட்சி செய்த பிரித்தானியா, காலனியாதிக்க காலத்தில் இந்தியாவிலிருந்து எடுத்து சென்ற பழங்கால பொக்கிஷங்களை, திரும்ப தருமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
@afp
இந்தியாவின் தலைநகரான புது தில்லியிலுள்ள அதிகாரிகளின் முதன்மை நோக்கம், நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு ஏகாதிபத்திய ஆய்வாளர்களால் பழம்பெரும் பொக்கிஷங்கள் எடுத்து செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கலைப் பொருட்களும், தற்போது மன்னரின் கிரீட நகைகளில் ஒன்றான கோஹினூர் வைரத்தை மீட்டெடுக்கப்பதாகும்.
@associated press
மேலும் பிரித்தானியாவின் இந்திய தூதரகத்தினர் இந்த பணியை மேற்கொள்வார்கள். இது பிரித்தானியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய உரிமை கோரல் போராட்டமாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று தி டெலிகிராப் தெரிவித்துள்ளது.
இந்தியா தொடர்ந்து போராடும்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்தின் முதன்மை இலக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை மீட்டெடுப்பதாகும்.
இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் போன்ற விஷயங்கள் தொடர்பான, பேச்சுவார்த்தைக்கு இடையூறு விளைவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@pa
இது குறித்து பேசிய இந்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் கோவிந்த் மோகன், ’தொல்பொருட்களை மீட்டெடுப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவின் தொல்பொருட்களை மீட்பதற்காக அதிகாரிகளை பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்’ என கூறியுள்ளார்.
மேலும் கலாச்சார அமைச்சகத்தின் ஒரு கிளையான, இந்திய தொல்பொருள் ஆய்வு, சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டிலிருந்து கடத்தப்பட்ட பொருட்களை மீட்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் என தெரிவித்துள்ளார்.
கோஹினூர் வைரம்
தென்னிந்தியாவில் உள்ள கோவிலிலிருந்து எடுக்கப்பட்ட வெண்கல சிலை தொடர்பாக, ஆக்ஸ்போர்டின் அஷ்மோலியன் அருங்காட்சியகம் ஏற்கனவே இந்தியாவால் அணுகப்பட்டுள்ளது.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட கலைப்பொருட்களை, திரும்பப் பெறுவதற்கான உந்துதலை புதுதில்லியில் உள்ள அதிகாரிகள் ஒருங்கிணைப்பார்கள்.
@gettyimages
காலனித்துவ ஆட்சியின் போது 'போரில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை திருப்பித் தருமாறு, நிறுவனங்களுக்கு முறையான கோரிக்கைகளை லண்டனில் உள்ள இராஜதந்திரிகளின் செயல்முறை இந்த ஆண்டு தொடங்கும்.
கோஹினூர் 105 காரட் வைரம் கலானியாதிக்க காலத்தில் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டது. இந்த நகை ராணி மேரியின் கிரீடத்தை அலங்கரித்துள்ளது, ஆனால் கடந்த வாரம் முடிசூட்டு விழாவில் காட்டப்படவில்லை.
@gettyimages
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருளை திரும்பப் பெறுவது 'ஆழமான அடையாளமாக' இருக்கும் என இந்தியா தொடர்ந்து செயல்படுவதாக தெரியவந்துள்ளது.