120 ஓட்டங்கள் இலக்கு வைத்து பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி! மிரட்டிய பும்ரா, ஹர்திக்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 உலகக்கிண்ண போட்டி நியூயார்க்கில் நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 42 ஓட்டங்களும், அக்சர் படேல் 20 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 13 ஓட்டங்களில் பும்ரா ஓவரில் அவுட் ஆனார். அடுத்து வந்த உஸ்மான் கானும், பஹர் ஜமான் தலா 13 ஓட்டங்களில் வெளியேறினர்.
அப்போது அணியின் ஸ்கோர் 12.2 ஓவரில் 73 ஆக இருந்தது. அதன் பின்னர் இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர்.
கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த ஓவரில் நசீம் ஷா இரண்டு பவுண்டரிகளை விரட்ட, பாகிஸ்தான் அணிக்கு 11 ஓட்டங்களே கிடைத்தது.
இதனால் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பும்ரா 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |