2026இல் இந்தியா ஜேர்மனியை முந்திவிடும்: ரிசர்வ் வங்கி கவர்னர்
2026இல் இந்தியா ஜேர்மனியை முந்திவிடும் என்று கூறியுள்ளார் இந்திய ரிசர்வ் வங்கி இணை கவர்னர்.
2027இல் மூன்றாவது இடத்தையும் இந்தியா பிடிக்கக்கூடும் என்கிறார் அவர்.
2026இல் இந்தியா ஜேர்மனியை முந்தி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடிக்கும் என்று கூறியுள்ளார் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களில் ஒருவரான Michael Patra.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ஜேர்மனியை எட்டி, 2025 -2026ஆம் பொருளாதார ஆண்டில் இந்தியா ஜேர்மனியை முந்தி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடிக்கும் என்றும், 2027வாக்கில், ஜப்பானையும் முந்தி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார் Michael Patra.
2017ஆம் ஆண்டில் பிரான்சை பின்னுக்குத்தள்ளி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடானது இந்தியா.
சமீபத்தில், பிரித்தானியாவை முந்தி, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.