Cryptocurrency வர்த்தகம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? வெளியான மகிழ்ச்சியான தகவல்
இந்தியாவில் Cryptocurrency-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிப்பது குறித்து அரசாங்கம் நடுநிலையான முடிவை எடுத்துள்ளது.
Cryptocurrency முதலீடு குறித்து உலக நாடுகள் அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறது.
அதே வேளையில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்பே, இந்தியர்கள் கோடிக்கணக்கான பணத்தை Bitcoin, Shiba Inu, Dogecoin, Ethereum எனப் பல முன்னணி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் சீனா கிரிப்டோகரன்சி சார்ந்த அனைத்து வர்த்தகம், உற்பத்தி ஆகியவற்றைத் தடை செய்தது.
ஆனால், அமெரிக்கா பிட்காயின் வாயிலான ETF-க்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் பல நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு அனுமதி கொடுக்கத் துவங்கியது.
இந்திய அரசு கிரிப்டோகரன்சியை முதலீடுகளுக்கும், அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிப்பது குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் நடக்க உள்ள குளிர்காலக் கூட்டத் தொடரில் கிரிப்டோகரன்சி தொடர்பான இறுதி சட்டவரைவுகளைத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் இதில் இந்தியா நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளது.
இன்றைய நிலையில், பல கோடி இந்தியர்கள் அதிகளவிலான தொகையை முதலீடு செய்துள்ளதால் கிரிப்டோகரன்சியைத் தடாலடியாகத் தடை செய்ய முடியாது.
அதற்காக வகைப்படுத்தப்படாத இந்தக் கிரிப்டோ சந்தை முதலீட்டை அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவிக்கவும் முடியாது.
இதனால் இந்திய அரசு இரண்டுக்கும் மத்தியில் ஒரு நிலைபாட்டை எடுக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
கிரிப்டோகரன்சி அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவித்துள்ள 5 நாடுகளில் சாதக பாதகங்கள் உடன், இந்தியர்கள் செய்யப்பட்ட முதலீட்டு அளவுகள், ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சி மீதான பார்வை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, தற்போது கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் மத்திய நிதியமைச்சகத்திடம் முன்னிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் கிரிப்டோகரன்சி-யை அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் இந்த முதலீட்டின் மீது வரி விதிப்பு குறித்த முடிவுகளை எடுக்கு முக்கிய ஆவணங்களும் நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கிரிப்ரோகரன்சியைத் தடை செய்யத் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.