அமெரிக்கா, பிரான்ஸ், சீனாவை விட வேகமாக வளரும் நாடு - ஐ.நா. வெளியிட்ட அறிக்கை!
ஆசிய நாடொன்று அமெரிக்கா, பிரான்ஸை விட வேகமாக வளர்ந்து வருவதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா உலகில் விரைவாக வளரும் முக்கிய பொருளாதார சக்தியாக தொடரும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் (WESP) குறித்த அரையாண்டு அறிக்கையின்படி, இந்தியா விரைவாக வளரும் உலகின் மிகப்பாரிய பொருளாதாரங்களுள் முதலிடம் வகிக்கிறது. எதிர்காலத்திலும் இந்த நிலை தொடரும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் 2025-26 ஆண்டில் 6.3% வளர்ச்சி அடையும் என ஐ.நா. கணித்துள்ளது.
சீனா 4.6 சதவீதமும், அமெரிக்கா 1.6 சதவீதமும், ஜப்பான் 0.7 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியம் 1 சதவீதமும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜேர்மனி -01 சதவீதம் என எதிர்மறை வளர்ச்சியைக் காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்தியா வேகமாக வளர்கிறது?
அரசுத் துறை முதலீடு, தனியார் நுகர்வின் மேம்பாடு, சேவை ஏற்றுமதி ஆகியவை முக்கிய காரணிகள் என அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், மருந்துகள், மின்னணு உற்பத்தி, செமிகண்டக்டர்கள், எரிசக்தி உள்ளிட்ட சில துறைகள் ட்ரம்ப் வரி சுமைகளை சமாளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி தரவுகள், இந்தியா உலக பொருளாதாரத்தில் முக்கிய நாடாக திகழ்வதை வலியுறுத்துகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India economy 2025 growth, UN WESP report India, fastest growing economy world, India GDP forecast, India vs China economy 2025, India unemployment April 2025, MoSPI PLFS data, India economic drivers, global trade tensions impact India