பந்துவீச்சை தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி: தடுமாறும் இந்திய அணி
இந்தியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி
இந்தியா-தென்னாப்பிரிக்க இடையிலான 3வது ஒருநாள் போட்டி Paarl-லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
BCCI/X
3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுமாறும் இந்திய அணி
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் 10 ஓட்டங்களிலும், ரஜத் படிதார் 22 ஓட்டங்களிலும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளனர்.
தற்போது 10.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 60 ஓட்டங்களை சேர்த்துள்ளது, சஞ்சு சாம்சன் 11 ஓட்டங்களுடனும், கேப்டன் ராகுல் 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
ICC/X
தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் ஹென்ட்ரிக்ஸ், நந்த்ரே பர்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |
India tour of South Africa, 2023-24, Indian Cricket Team, South Africa Cricket Team, Sanju Samson, KL Rahu