ஜேர்மனிக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் 8.6 சதவீதம் உயர்வு
ஜேர்மனிக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 8.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
2024-ல் ஜேர்மனியில் இந்தியர்கள் தங்குவது 8.6 சதவீதம் உயர்ந்து மொத்தம் 8,97,841 என பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மானிய தேசிய சுற்றுலா வாரியம் (GNTO) புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
மேலும், இந்தியர்களின் சராசரி தங்கும் நாட்களும் 9.3-இலிருந்து 9.6 நாட்களுக்கு உயர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக, இந்தியா-ஜேர்மனி இடையிலான விமான சேவைகளில் ஏற்பட்ட வளர்ச்சி குறிப்பிடப்படுகிறது.
2019 ஜனவரியில் 241 விமானங்கள் இருந்த நிலையில், 2025 ஜனவரியில் அது 309-ஆக, 28 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
Skift India வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திய பயணிகள் செலவுகள் உலக சராசரியை விட நான்கு மடங்கு வேகமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய சந்தையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
ஜேர்மானிய தேசிய சுற்றுலா வாரியத்தின் இந்திய கிளையின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குநர் ரோமிட் தியோபிலஸ், “பயணத்தில் ரசனை கொண்ட இந்தியர்கள், இயற்கையின் அமைதியும், கலாச்சார அனுபவங்களும் கலந்த ஜேர்மனியை விரும்புகிறார்கள். தம்பதிகள் அல்லது சாகச விரும்பிகள் அனைவருக்கும் ஏற்ற இடமாக ஜேர்மனி திகழ்கிறது. எங்களது நிலைத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியம் இந்திய பயணிகளை மிக அதிகம் ஈர்க்கும்,” என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |