267 பந்துகளில் 233 ரன் விளாசிய இலங்கை வீரர்! பதிலடியாக இந்திய அணி தொடக்க வீரர்கள் சதம்
இலங்கை அணிக்கு எதிரான U19 டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சதம் விளாசினர்.
செனுஜா வெகுனாகோடா
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான U19 டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 424 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
செனுஜா வெகுனாகோடா (Senuja Wekunagoda) 233 (267) ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 1 சிக்ஸர், 33 பவுண்டரிகள் அடங்கும்.

தொடக்க வீரர்கள் சதம்
அணித்தலைவர் விமத் தின்சரா 52 ஓட்டங்களும், கவிஜா 49 ஓட்டங்களும், சமிகா 45 ஓட்டங்களும் எடுத்தனர். ஜெகநாதன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களான லக்ஷ்யா ராஜேஷ் மற்றும் சாகர் விர்க் சதம் விளாசினர்.

இந்தக் கூட்டணி 257 ஓட்டங்கள் குவிக்க மழை குறுக்கிட்டது. லக்ஷ்யா ராஜேஷ் (Lakshya Rajesh) 134 ஓட்டங்களுடனும், சாகர் விர்க் (Sagar Virk) 112 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |