சேவாக் மகனின் அதிரடி தொடக்கம்: கேப்டன் 110 நாட்அவுட்..ஒயிட்வாஷ் செய்த இந்தியா U19
India u19 team clean sweeps australia: அவுஸ்திரேலியா U19 அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா U19 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா U19 அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா U19 அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
254 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
இந்தியா U19 மற்றும் அவுஸ்திரேலியா U19 அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடந்தது.

முதலில் ஆடிய அவுஸ்திரேலியா U19 அணி 49.3 ஓவர்களில் 254 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜெட் ஹோல்லிக் 87 ஓட்டங்களும், நீல் பட்டேல் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.
மோஹித் உல்வா மற்றும் மனல் சௌஹான் தலா 3 விக்கெட்டுகளும், காவ்யா பட்டேல், ஆர்யன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இந்தியா U19 அணியில் ஆர்யவீர் சேவாக் 34 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, வினீத் 10 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து அணித்தலைவர் லக்ஷ்யா ராஜேஷ் மற்றும் குஷாக்ரா ஓஜா கூட்டணி வேகமாக ஓட்டங்களைச் சேர்த்தது. ஓஜா 45 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அர்ஜுன் ராஜ்புத் டக்அவுட் ஆனார்.
லக்ஷ்யா சதம்
எனினும் ரஜத் பஹேல் அதிரடியில் மிரட்ட, லக்ஷ்யா சதம் விளாசினார். இந்தக் கூட்டணியின் மூலம் இந்தியா U19 அணி 41.2 ஓவர்களில் 255 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லக்ஷ்யா ராஜேஷ் ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 9 பவுண்டரிகள்), ரஜத் 44 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி, 30 ஆண்டுகால சாதனையை முறியடித்தது.