இந்திய பெருங்கடலில் பிரித்தானிய கடற்படையுடன் இந்திய விமானப்படை கூட்டுப்பயிற்சி
பிரித்தானிய கடற்படையுடன் இந்திய விமானப்படை இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது.
இந்திய விமானப்படை (IAF) பிரித்தானிய கடற்படையின் Carrier Strike Group-உடன் (CSG) இணைந்து செவ்வாய்கிழமை (அக்டோபர் 14), இந்தியப் பெருங்கடலில் கூட்டு விமானப் பயிற்சியில் ஈடுபட்டது.
இந்த பயிற்சி, இந்திய விமானப்படையின் சுகோய்-30 MKI, ஜாகுவார், AWACS மற்றும் AEW&C விமானங்கள் மற்றும் HMS Prince of Wales கப்பலில் இருந்து புறப்பட்ட Royal Navy-யின் F-35B போர் விமானங்களுடன் இணைந்து நடைபெற்றது.
இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம், இரு நாடுகளின் பாதுகாப்பு படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு திறனை மேம்படுத்துவது, பரஸ்பர நம்பிக்கையை வலுப்பப்படுத்துவதும் மற்றும் பிராந்திய நிலைத்தன்மைக்கு இணைந்த அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதாகும்.
இந்த விமானப் பயிற்சிக்கு முன், அக்டோபர் 8-ஆம் திகதி KONKAN 25 என்ற கடற்பயிற்சியையும் இரு நாடுகளும் வெற்றிகரமாக் முடித்தது குறிப்பிடத்தக்கது.
KONKAN 25 பயிற்சியில், இந்திய மற்றும் பிரித்தானிய கடற்படையில் பல்வேறு கடுமையான கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இதில், tactical air warfare, air defence, surface மற்றும் anti-submarine warfare மற்றும் underway replenishment ஆகிய நடவடிக்கைகள் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |