பிரித்தானியா- இந்தியா கூட்டணியில் ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டமைப்பு
சூரிய மின்சக்தி வெற்றிகரமாக செயல்படுவதற்கான திறனை அதிகரிக்க பிரித்தானியாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டமைப்பு என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளன.
பருவநிலை மாற்றத்தால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் தீவு நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்று கிளாஸ்கோ உச்சிமாநாட்டில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, பிரித்தானிய பிரதமா் போரிஸ் ஜோன்சன், அவுஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குறித்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, சூரிய மின்சக்தி வெற்றிகரமாக செயல்படுவதற்கான திறனை அதிகரிக்க ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டமைப்பு தீர்வாக இருக்கும் என்றார்.
உலகின் அனைத்து பெரிய அளவிலான சூரிய மின் நிலையங்கள், காற்றாலைகள் மற்றும் கூரைகள் மீது நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புகள் என அனைத்தும் இணைக்கப்படும்.
இது அனைவருக்குமான மின் தேவைகளை சுர்றுச்சூழலுக்கு தீங்கின்றி அளிக்கும். குறித்த திட்டமானது இந்தியா மற்றும் பிரித்தானியாவால் பங்குதாரர்களாக முன்னெடுக்கப்படும்.
இந்த திட்டமானது அடுத்த சில ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் எனவும், அதன் பின்னர் பல்வேறு நாடுகளுக்கு சூரிய மின்சக்தியை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உலகளாவிய தொடர்புகளை ஏர்படுத்திக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஆப்பிரிக்க சக்தி மையங்களை மேம்படுத்துகிறது எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த திட்டத்தால் ஆண்டுக்கு 226 பில்லியன் யூரோ அளவுக்கு மின்சக்தியை சேமிக்கலாம் என நம்பப்படுகிறது.