இந்தியா-பிரித்தானியா FTA: விலை குறைய உள்ள 10 கார்களும் பைக்குகளும்!
இந்தியா மற்றும் பிரித்தானியா இடையிலான இலவச வர்த்தக ஒப்பந்தம் (FTA) இறுதியாகி விட்டது.
இதன் மூலம், பிரித்தானியாவில் தயாராகும் விலையுயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இந்தியாவில் ஐம்பது சதவீதத்திற்கும் குறைவான இறக்குமதி வரி விதிக்கப்படும்.
தற்போதைய 110% இறக்குமதி வரிக்கு மாற்றாக, இது முதலாண்டில் 50 சதவீதமாகவும், ஐந்தாண்டுக்குள் 10% வரை குறைக்கப்படும்.
இதன் மூலம் பின்வரும் பிரபல வாகனங்கள் இந்திய சந்தையில் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கப் போகின்றன:
Rolls-Royce
Phantom, Ghost மற்றும் Cullinan போன்ற ரூ.6 கோடி தொடக்கம் விலையுள்ள சொகுசு கார்கள் இப்போது சிறந்த விலையில் கிடைக்கப்போகின்றன.
Bentley
Bentayga, Continental GT, மற்றும் Flying Spur ஆகியவையும் விலை குறையப்போகும் பிரம்மாண்ட வாகனங்களில் அடங்கும்.
Jaguar
Tata-வின் Jagaur Type 00 Concept போன்ற புதிய மொடல்கள் குறைந்த வரியுடன் வரலாம். தற்போதைய F-Pace உள்ளூர் சாஸியில் தயாரிக்கப்படுகிறது.
Land Rover
Range Rover மற்றும் Range Rover Sport SV போன்ற மொடல்கள் முழுமையாக இறக்குமதி செய்யப்படுவதால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
Aston Martin
Vantage, DB12, DBX போன்ற ரூ.4 கோடி முதல் ரூ.9 கோடி வரை உள்ள மொடல்களுக்கு சுங்க வரி குறைவாகும்.
Lotus
Emira ஸ்போர்ட்ஸ் கார் உடனடி சலுகை பெறும். EV மொடல்களுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு சலுகை கிடைக்கும்.
MINI
பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் MINI Cooper S மற்றும் Convertible மொடல்களுக்கு உடனடி விலை குறைவு எதிர்பார்க்கப்படுகிறது.
McLaren
750S மற்றும் GT ஸ்போர்ட்ஸ் கார்கள், இந்தியாவில் விலை குறைவால் விரைவில் அதிகமாக சந்தைக்குள் வரும் என நம்பப்படுகிறது.
Norton Motorcycles
TVS நிறுவனத்தின் கீழ், இந்திய சந்தைக்கு V4 மொடல்கள் மற்றும் புதிய 450cc பைக்குகள் வரவிருக்கின்றன.
Triumph Rocket 3 Evel Knievel
பிரித்தானியாவில் தயாராகும் சிறப்பு பதிப்புகள் குறைந்த வரியில் கிடைக்கும்; இந்தியாவில் தயாராகும் மொடல்கள் பிரித்தானியாவிற்கு எளிதில் ஏற்றுமதி செய்யலாம்.
இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் பிரித்தானியா இடையிலான வாகன வர்த்தகத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India UK FTA car price reduction, India UK Free Trade Agreement 2025, Rolls-Royce import duty India, Bentley cheaper in India, Jaguar Land Rover FTA benefit, McLaren India price cut, MINI Cooper S FTA, Norton Triumph motorcycle import, British cars cheaper in India, UK cars tariff slash India