U19 உலகக் கோப்பை: சூர்யவன்ஷி அதிரடி சதம்: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!
U19 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இங்கிலாந்தை புரட்டி எடுத்த வைபவ் சூர்யவன்ஷி
ஜிம்பாப்வேயின் ஹாராரேயில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற இந்த பலப்பரீட்சையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார்.
வைபவ் சூர்யவன்ஷி(Vaibhav Suryavanshi) வெறும் 80 பந்துகளில் 15 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 175 ஓட்டங்கள் விளாசினார்.
கேப்டன் ஆயுஷ் மாத்ரே 51 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ஓட்டங்கள் குவித்தது.
6வது முறை சாம்பியன்
412 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பென் டாவ்கின்ஸ் 56 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்தார்.
அதிரடியாக விளையாடிய பென் மேய்ஸ் 28 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாசினார்.
ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், சிறப்பாக விளையாடிய கலெப் பால்கனர் 67 பந்துகளில் 115 ஓட்டங்கள் குவித்து அணிக்காக கடைசி வரை போராடினார்.
இருப்பினும் இங்கிலாந்து அணி 40.2 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
𝗖.𝗛.𝗔.𝗠.𝗣.𝗜.𝗢.𝗡.𝗦 🏆
— BCCI (@BCCI) February 6, 2026
Congratulations to India U19 on winning the ICC Men's U19 World Cup 2026 👏👏
Their historic 6⃣th title 🫡
Take. A. Bow 🙇
Scorecard ▶️ https://t.co/hisult7mtv #U19WorldCup pic.twitter.com/5a0Pf4wpTw
இதன் மூலம் 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று U19 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா 6வது முறையாக கைபற்றுவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |