இந்தியாவில் அணு ஆயுத தாக்குதல் நடந்தால் எந்தெந்த நகரங்கள் பாதிக்கும் தெரியுமா?
இந்தியாவை யாராவது அணு ஆயுதம் மூலம் தாக்குதல் தொடுத்தால் எந்தெந்த பகுதிகள் அதிகமாக பாதிக்கும் என்று பார்க்கலாம்.
இந்தியாவை பொறுத்தவரை சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களாக உள்ளன.
உதாரணத்திற்கு, இந்தியாவில் அணு ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் இந்த நகரங்களே பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனலாம்.
ஏனென்றால் இங்கு அதிக மக்கள் தொகை இருப்பதால் பயங்கரவாதிகளின் வியூகங்களில் இந்த நகரங்களே அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.
நாகசாகியில் பயன்படுத்தப்பட்ட 25 கிலோ டன் அணு ஆயுதம் இந்திய நகரங்களின் மீது பயன்படுத்தப்பட்டால் 7 முதல் 20 லட்சம் வரை மக்கள் உடனடியாக உயிரிழக்க வாய்ப்புள்ளது.
மேலும், இது 1.6 கிலோமீட்டர் சுற்றளவிற்கு ஒட்டுமொத்த கட்டுமானங்களும் தரைமட்டமாகிவிடும் என கூறப்படுகிறது.
100 கிலோ டன் அணு ஆயுதம் ஒரு நகரின் 20 லட்சம் மக்களை கொன்று குவிக்கும் எனலாம்.
அதாவது, உதாரணத்திற்கு சென்னையில் அணு ஆயுதம் வீசப்பட்டால் அதன் தாக்கம் செங்கல்பட்டு வரை கூட நீளும் எனலாம்.
இதனால் கதிர்வீச்சு பாதிப்பு, உணவு பற்றாக்குறை, மின்சாரமின்மை, பொருளாதார சீர்குலைவு என பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு ஒரு நாடே அழிந்துவிடும்.
அதேநேரத்தில், மின் கட்டமைப்புகள், மருத்துவமனைகள், போக்குவரத்து கட்டமைப்புகள் மற்றும் வாகனங்கள், தகவல் தொடர்பு கட்டமைப்புகள் மொத்தமாக பாதிப்படையும்.
இதனால், காயமடைந்தவர்கள், உயிர் பிழைத்தவர்களுக்கு கூட தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்க வழி ஏற்படாமல் போகும்.
அணு ஆயுதத்தின் கதிர்வீச்சால் ஆறுகள் பாழாய் போகும், பயிர்கள் கருகிவிடும், காற்றும் கூட விஷமாக மாறிவிடும் சூழல் ஏற்படும்.
அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் மரபணு ரீதியில் பாதிப்புகள் ஏற்படலாம்.
மேலும், பல ஆண்டுகளுக்கு சுற்றுச்சுழலில் கதிர்வீச்சு பாதிப்புகளின் சுவடுகள் இருந்துகொண்டே இருக்கும்.
நகரங்களில் இருந்து பலரும் கிராமப்புறங்களை நோக்கி செல்வதால் கிராமப்புற வளங்கள் சுரண்டப்பட்டு பஞ்சம், பட்டினி, நோய் போன்றவை தலைவிரித்தாடும்.
அணு ஆயுதம் தாக்குதலில் நகரங்கள் அதிகம் பாதிக்கப்படும். அதேநேரத்தில், கிராமத்தில் பாதிப்புகள் குறைவாக இருக்கும் எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |