இந்திய மத்திய பட்ஜெட் 2023-24: விலை உயரும், குறையும் பொருட்கள் என்னென்ன?
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
2023-24 மத்திய பட்ஜெட்
நிர்மலா சீதாராமன் இன்று ஐந்தாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2023-24 மத்திய பட்ஜெட், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு அளவிலான பட்ஜெட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து எந்தெந்த பொருட்களுக்கான விலை உயரும், எவற்றின் விலை குறையும் என்பது குறித்து பார்ப்போம்.
PC: Sansad TV/Youtube
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி நகைகளுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயர்கிறது.
விலை உயரும் பொருட்கள்:
தங்கம், வெள்ளி நகைகள்
கவரிங் நகைகள்
சிகரெட்
இறக்குமதி செய்யப்படும் கார்
இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள்
மின்சார சமையலறை புகைபோக்கி
இறக்குமதி செய்யப்பட்ட மிதிவண்டிகள் மற்றும் பொம்மைகள்
விலை குறையும் பொருட்கள்:
மொபைல் போன்களுக்கான பாகங்கள்
டிவி பேனல்களுக்கான பாகங்கள்
லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள்
EV தொழில்துறைக்கான மூலப்பொருட்கள்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.