இந்தியாவின் விண்வெளி நிலையம்: முதல்முறையாக BAS மொடலை வெளியிட்ட ISRO
இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகத்தின் மொடலை ISRO வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தேசிய விண்வெளி தின விழாவில் BAS-01 எனப்படும் முதல் மொடல் தொகுதியை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 2028-ஆம் ஆண்டில் முதல் தொகுதி விண்வெளிக்கு அனுப்பப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.
2035-க்குள் முழுமையான BAS (Bharatiya Antariksh Station) விண்வெளி நிலையம் உருவாக்கப்படும்.
தற்போது, சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) மற்றும் சீனாவின் Tiangong ஆகிய இரண்டு விண்வெளி ஆய்வகங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
இந்தியாவின் BAS விண்வெளி நிலையம் செயல்பட தொடங்கினால், இந்த சிறப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேரும்.
BAS-01 தொகுதி 10 டன் எடையுடன், பூமிக்கு 450 கி.மீ. உயரத்தில் Low Earth Orbit-ல் நிலைநிறுத்தப்படவுள்ளது.
இதில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட ECLSS கட்டுப்பாட்டு அமைப்பு, Bharat Docking System, Bharat Berthing System, Automated Hatch System போன்ற பல முக்கிய அம்சங்கள் உள்ளன.
இத்திட்டம் இந்தியாவின் விண்வெளி துறையில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |