பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா
பாகிஸ்தான், சீனா போன்ற எதிரிநாடுகளுக்கு கவலையளிக்கும் விதமாக, இந்தியா அதன் விமானப்படையில் Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்தியாவால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட தேஜஸ் MK1 போர் விமானம், 2026-ஆம் ஆண்டு முதல் பாரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ளது.
இந்த மேம்பாட்டின் மூலம், இவைகள் புதிய தலைமுறையிலான அதிநவீன போர் விமானங்களுடன் போட்டியிடும் திறனை பெறவுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் 40 தேஜஸ் MK1 விமானங்கள் - 32 ஒற்றை இருக்கை போர் விமானங்களும், 8 இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களும் மேம்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக avionics, radar, electronic warfare systems, weapon systems ஆகிய அத்தியாவசிய பகுதிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது.
முந்தைய ELM-2032 ரேடாருக்கு மாற்றாக, புதிய ELM-2052 AESA ரேடார் பொருத்தப்படும்.
மேம்படுத்தும் நடவடிக்கையின் போது, ஒவ்வொரு விமானமும் முழுமையான overhaul செய்யப்படும். அதாவது பழைய, பழுதுபட்ட பாகங்களை அகற்றியும், புதியவை பொருத்தியும் விமானம் முழுமையாக புதுப்பிக்கப்படும்.
தேஜஸ் MK1விமானம் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெடின் (HAL) தயாரிப்பு. இது 4.5 தலைமுறை, பல்கைரகம் கொண்ட சுபர்சோனிக் போர் விமானம். இது வான்வழிப் போராட்டத்துக்கும், தரையிலான தாக்குதலுக்கும் பயன்படக்கூடியது.
இந்த மேம்பாட்டு நடவடிக்கையை இந்தியா மேற்கொள்வது, பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் கவலையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஏனெனில், Tejas MK1 இந்தியாவின் சுய பாதுகாப்புத் தகுதியை மேலும் வலுப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tejas MK1 upgrade 2026, India fighter jet overhaul, HAL Tejas MK1 news, Indian Air Force modernization, Tejas MK1 AESA radar, Tejas Mk1 vs Chinese jets, HAL Tejas Mk1 enhancement, Indigenous Indian fighter jet, Tejas Mk1A radar upgrade, Indian defense news 2025, Tejas Mk1 combat aircraft