எந்தெந்த நாடுகளில் இந்தியர்கள் UPI மூலம் பணம் செலுத்தலாம் தெரியுமா? லிஸ்டில் இலங்கை, பிரான்ஸ்..,
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
UPI (Unified Payments Interface) மொபைல் ஃபோன் ஆப்ஸ் மூலம் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
UPI நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மூலம் கண்காணிக்கப்படுகிறது.
உள்நாட்டு உபயோகத்தில் மட்டுமே இருந்த UPI Digital Payments படிப்படியாக வெளிநாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, குறிப்பாக மொபைல் ஆப் அடிப்படையிலான Payments- UPI கட்டணங்கள்.
UPI சேவைகள் ஏற்கனவே ஏழு நாடுகளில் கிடைக்கின்றன. இதற்காக இந்திய அரசு கூட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம், BHIM உடன் இணைந்து G-Pay, Phone Pay, Paytm போன்ற மூன்றாம் தரப்பு Appகள் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஓன்லைனில் பணம் செலுத்தலாம்.
வெளிநாட்டில் Apps அடிப்படையிலான கட்டணங்களை அனுமதிப்பது, அந்த நாடுகளின் நாணயத்தில் பணம் செலுத்த அனுமதிக்கிறது.
குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் டொலர்கள் மற்றும் கரன்சிகளை கொண்டு செல்ல தேவையில்லை.
UPI கட்டணத்தை அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கும் நாடுகளின் பட்டியல் இதோ:
- இலங்கை
- மொரீஷியஸ்
- பிரான்ஸ்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- சிங்கப்பூர்
- பூட்டான்
- நேபாளம்
இலங்கையில் பயணம் செய்யும் போது வணிகர்களிடம் QR Code-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் UPI பணம் செலுத்தலாம்.
இந்தியர்கள் மொரீஷியஸுக்குச் சென்றாலும் அல்லது மொரீஷியர்கள் இந்தியாவுக்கு வந்தாலும், அவர்கள் உடனடி கட்டண முறை பயன்பாட்டின் உதவியுடன் UPI பணம் செலுத்தலாம்.
வெளிநாடுகளில் UPI சேவைகளை முதலில் அனுமதித்தது பூட்டான். ஜூலை 13, 2021 அன்று பூட்டானில் UPI சேவைகள் கிடைக்கும். இதற்காக, BHIM ஆப் மற்றும் Royal Monetary Authority of Bhutan ஆகியவை கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
National Payments Corporation of India (NPCI), பிரான்சின் Lyra நெட்வொர்க்குடன் இம்மாதம் இரண்டாம் திகதி கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஏப்ரல் 21, 2022 அன்று UPI சேவைகள் தொடங்கப்பட்டன. Mashreq வங்கியின் துணை நிறுவனமான Neo Payக்கு சொந்தமான Neo Pay terminalsகளில் இருந்து வணிகர்களுக்கு பணம் செலுத்தலாம்.
சிங்கப்பூரின் Pay Now நிறுவனம் UPI உடன் ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது. ஒரு இந்திய UPI பயனர் சிங்கப்பூர் Pay Now பயனருக்குப் பணம் செலுத்தலாம்.
இம்மாத இறுதியில், நேபாள அரசாங்கத்துடன் UPI பணம் செலுத்துவதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டது.
இந்திய Driving Licence இருந்தால் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் 10 வெளிநாடுகள்., பட்டியலில் 5 ஐரோப்பிய நாடுகள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
UPI, countries accepting India’s digital payments system, UPI accepting countries, Sri Lanka, France, Mauritius, UAE, Singapore, Bhutan, Nepal