அடிலெய்டு டெஸ்டில் ஆல் அவுட்டான இந்திய அணி., வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது அவுஸ்திரேலியா
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் அடிலெய்டு டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
9 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்கள் எடுத்தது.
5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
பெர்த் டெஸ்டில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மூன்றாவது போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் டிசம்பர் 14-ம் திகதி தொடங்குகிறது.
அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 175 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 128 ஓட்டங்கள் எடுத்திருந்த அந்த அணி கடைசி 5 விக்கெட்டுகளை இழந்து 47 ஓட்டங்கள் எடுத்தது.
ரிஷப் பண்ட் இன்று ஓட்டம் ஏதும் எடுக்க முடியாமல் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 15 ஓட்டங்கள் எடுத்திருந்த நிதிஷ் ரெட்டி 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவுஸ்திரேலிய தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்டார்க் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 337 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் (140) சதம் அடித்தார்.
நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்த போதிலும் அந்த அணியால் 180 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India vs Australia, IND Vs AUS Adelaide Test