தோனி போலவே ஆடும் இந்திய வீரர்! உலகக்கோப்பையை தட்டி தூக்கும் ஆவலில் இந்திய அணி
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான அண்டர்-19 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது.
இத்தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். யாஷ் துல் அடுத்த விராட் கோலியாகவும், ரஷித் அடுத்த அசாரூதீனாகவும் கருதப்படுகின்றனர். இந்த நிலையில், தோனிக்கு பிறகு எந்த ஒரு அதிரடி வீரரையும் இந்திய அணி இதுவரை கண்டு பிடிக்கவில்லை.
ஆனால் இம்முறை தோனியை போலவே அதிரடியாக ஆடக் கூடிய விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு கிடைத்துவிட்டார். ஆம், ஹரியானாவை சேர்ந்த 17 வயதான தினேஷ் பானா , அண்டர் 19 கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார்.
ஆனால் தோனியை போல் தனித்துவமான ஷாட்களை ஆடவில்லை என்றாலும், இவர் பிக் ஹிட்டருக்கு ஏற்ற இலக்கணத்தில் கலக்குகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த போது களத்துக்கு வந்தார் தினேஷ் பானா. எதிர்கொண்ட நான்கே பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார்.
இதனால், தினேஷ் பானா மீது இன்றைய இறுதிப்போட்டியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அதே நேரம் இங்கிலாந்து அணியும் சம பலத்துடன் இந்தியாவை வீழ்த்தும் நோக்கில் களம் காண்கிறது.