410 ஓட்டங்கள் குவித்த இந்தியா! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நெதர்லாந்து
உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டமான இன்று நெதர்லாந்துக்கு எதிராக இந்தியா 410 ஓட்டங்கள் குவித்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி தொடங்கியது.
இதில் நாணயசுழற்சியில் பெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே நெதர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஓபனிங் செய்த ரோகித் சர்மா - ஷுப்மன் கில் கூட்டணி 100 ஓட்டங்கள் எடுத்தது.
கில் 51 ஓட்டங்களிலும், ரோகித் சர்மா 61 ஓட்டங்களிலும், விராட் கோலி 51 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக இணைந்த ஸ்ரேயஸ் ஐயரும், கேஎல் ராகுலும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது.
46வது ஓவரில் உலகக் கோப்பையில் முதல் சதத்தை பதிவு செய்தார் ஸ்ரேயஸ் ஐயர், கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசிய கேஎல் ராகுல் சதமடித்தார்.
முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ஓட்டங்கள் எடுத்தது இந்திய அணி, நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீடே அதிகபட்சமாக இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்ததாக களமிறங்கிய நெதர்லாந்து அணி 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது, சிராஜ் ஓவரில் வெஸ்லி பாரேசி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தற்போது 66 ஓட்டங்களில் 2வது விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது,