ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் முதல்முறையாக மோத உள்ள இந்தியா பாகிஸ்தான் - எப்படி பார்ப்பது?
ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் முதல்முறையாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோத உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
கடந்த மே 7 ஆம் திகதி, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியழித்தது.
இதன் காரணமாக, இரு நாடுகளுக்கிடையே பெரும் போர் பதற்றம் நிலவியது. நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது, தூதரை வெளியேற்றுவது என பாகிஸ்தான் மீது, இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த பதற்றங்களுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோத உள்ளதால், பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
WCL தொடர்
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2025 சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
🚨 WCL Schedule Alert! 🚨
— CricInformer (@CricInformer) July 18, 2025
WCL launches today in England! Celebrate the return of cricket icons and the magic of our childhood favorites on the field. Get ready for unforgettable cricket! 🏆#wcl2025 #Cricket #indiancricketteam #legend #BCCI #icc
📸star sports pic.twitter.com/VRyuYwsa94
லீக் கட்டத்தில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெறும், இதில் ஒவ்வொரு அணியும் ஒருமுறை மற்ற அணிகளை எதிர்கொள்ளும். புள்ளிப்பட்டியலில், முதல் 4 இடம் பெரும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி, ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறும்.
இந்தியா vs பாகிஸ்தான்
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா சாம்பியன்ஸ் அணி யுவராஜ் சிங் தலைமையில் விளையாட உள்ளது.
இந்திய அணியில், ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, பியூஷ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி உள்ளிட்ட பிரபல வீரர்கள் விளையாட உள்ளனர்.
🇮🇳 INDIA vs PAKISTAN 🇵🇰⁰The biggest rivalry in cricket is BACK — and it’s happening in just 3 days! 🔥⁰Sunday, 20th July – Legends collide in the World Championship of Legends 2025! 🏏💥
— World Championship Of Legends (@WclLeague) July 16, 2025
Limited seats left — don’t miss history in the making!⁰🎟️ Book your tickets NOW! pic.twitter.com/SAJcSrg5Gq
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி, ஜூலை 20 ஆம் திகதி எட்ஜ்பாஸ்டனில், இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளின் நேரலையை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் Fancode செயலி, இணையதளத்தில் பார்க்க முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |