Asia Cup 2025: இந்தியாவுடன் இறுதிப் போட்டிக்கு முன்னறியது பாகிஸ்தான்., வங்காளதேசம் படுதோல்வி
2025 Asia Cup T20 தொடரின் Super Four சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேசத்தை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியாவுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த வெற்றியுடன், பாகிஸ்தான் 2000 மற்றும் 2012-ல் வென்ற Asia Cup பட்டத்தை மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பை பெற்றுள்ளது.
துபாயில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் அடித்திருந்தது. விக்கெட் கீப்பர் ஹாரிஸ் 23 பந்துகளில் 31 ஓட்டங்கள் அடித்து அணியை மூன்று எண் ஸ்கொருக்கு இழுத்துச் சென்றார்.
வங்காளதேச பந்துவீச்சில் தாஸ்கின் அஹமத் (3-28) மற்றும் மஹெதி ஹசன் (2-28) சிறப்பாக விளையாடினர்.
இரண்டாவது இன்னிங்சில் வங்காளதேச அணி ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது.
ஷமீம் ஹொசைன் 25 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து எதிரிபார்ப்பை உருவாக்கினார்.
அனால் ஷாஹீன் அஃப்ரிடி (3-17) அவரை வெளியேற்றியதும், ஹாரிஸ் ரவூபும் 2 விக்கெட்டுகளை 3 பந்துகளில் வீழ்த்தினார். இறுதியில், வங்காளதேசம் 124-9 என்ற எண்ணிக்கையில் முடிவடைந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான Asia Cup 2025 இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |