இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி! இந்திய அணியின் ப்ளேயிங் 11 இதுதான்.. கசிந்த பெயர்கள்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணி மோதும் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. கடந்த பல ஆண்டுகளாகவே இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
அதனால் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அந்த வகையில் இன்று நடைபெறும் போட்டி இரு நாட்டின் ரசிகர்களிடம் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடயில் இன்றைய போட்டியில் இந்தியா சார்பில் விளையாடும் 11 வீரர்களின் விபரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கே எல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பாண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ராகுல் சஹார் அல்லது வருண் சக்கரவர்த்தி.