ராகுல் டிராவிட்டுக்கு காத்திருக்கும் சவால்! இந்தியா தோற்றால் அவருக்கு கெட்ட பெயர்: பிரபல வீரர்
தென்னாப்பிரிக்க தொடரானது இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு சவால் மற்றும் ஆசிட் டெஸ்ட் என முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி கூறியுள்ளார்.
ரவி சாஸ்திரி பயிற்சியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்தில் கலக்கியிருக்கும் இந்திய அணி அதிவேக பவுன்ஸ் பிட்ச்கள் கொண்ட தென் ஆப்பிரிக்காவில் டிசம்பர் 26 முதல் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பெரிய ஆசிட் டெஸ்ட் என்கிறார் முன்னாள் ஆல்ரவுண்டர் ரிதீந்தர் சிங் சோதி.
3 டெஸ்ட் மட்டுமல்ல, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் உள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வலுவான அணியில்லை என்றாலும், சொந்த நாட்டில் அவர்கள் பந்து வீச்சு பயங்கரமானது, ரபாடா, நார்ட்யே, லுங்கி இங்கிடி, ஆலிவியர் என்று பெரும்படை இந்தியாவை தாக்க தயாராக இருக்கிறது.
குறைந்த ஸ்கோர் தொடராக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகையில் பேப்பரில் இந்திய அணி வலுவாக உள்ளது.
ஆனால் இந்திய பேட்டிங்கில் ரோகித் இல்லை, ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, கோலி டாப் ஆர்டர் இந்த பவுலிங்குக்கு எதிராக தேறுமா என்பது தெரியவில்லை.
மேலும் ரவிசாஸ்திரி தான் ஒரு பெரிய வீரர் இல்லாவிட்டாலும் தான் ஒரு பெரிய கோச் என்பதை நிரூபித்து சென்றுள்ள நிலையில் இந்தத் தொடரில் தோற்றால் அது ராகுல் டிராவிட்டுக்கு நிச்சயம் கெட்ட பெயரைத் தான் உருவாக்கும் என ரிதீந்தர் சிங் கூறியுள்ளார்.