IND vs SL 1st ODI: நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.
IND vs SL 1st ODI
டி20 ஐ 3-0 என்ற கணக்கில் வெற்றிகரமாகப் பெற்ற பிறகு, இந்தியா கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது.
இதன் முதல் ஆட்டம் இன்று (02) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் (R. Premadasa Stadium) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்திய அணி
இந்திய அணியில் இருந்து ரோஹித் ஷர்மா, ஹப்மான் கில் , விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா ஆகியோர் விளையாடவுள்ளனர்.
இலங்கை அணி
இலங்கை அணியில் இருந்து சரித் அசலங்க, பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, சமிக கருணாரத்னே, மஹேஷ் தீக்ஷன, அசித தனஞ்சன, அகிலா தனஞ்சன, அகிலா தனஞ்சன , எஷான் மலிங்க ஆகியோர் விளையாடவுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |