இலங்கை தொடர்! இந்திய அணியின் முக்கிய வீரர் திடீர் விலகலால் ரசிகர்கள் கவலை
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார்.
சஞ்சு சாம்சன் காயம்
இலங்கை - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வரும் நிலையில் முதல் போட்டியில் இந்தியா வென்றது. இன்று இரண்டாவது போட்டி நடக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரரான சஞ்சு சாம்சன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரராக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் கடந்தாண்டு 12 போட்டிகளில் விளையாடி 234 ரன்களை விளாசினார்.
thesportsmania
சஞ்சு சாம்சன் இடத்தை...
ஜித்தேஷ் சர்மா வந்தாலும், சாம்சனின் இடத்தை ராகுல் திரிபாதி தான் நிரப்புவார் எனத்தெரிகிறது. ஐபிஎல்-ல் அதிக அனுபவம் உள்ள திரிபாதிக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பே கொடுக்கப்படாத நிலையில் அது இன்று மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.