மீண்டும் பதிலடி கொடுத்த இந்தியா: வெஸ்ட் இண்டீஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி
நான்காவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹாய் ஹோப் 29 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 45 ஓட்டங்களும், ஹெட்மயர் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 61 ஓட்டங்களும் குவித்தனர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.
West Indies will bat first in Florida as they aim to close a series win ?#WIvIND | ? https://t.co/Dzg9Msf5g8 pic.twitter.com/NDJxAYwZVm
— ICC (@ICC) August 12, 2023
வெற்றியை துரத்தி பிடித்த இந்தியா
இதையடுத்து சற்று கடினமாக இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உடன் 84 ஓட்டங்களும், சுப்மன் கில் 47 பந்துகள் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 77 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
India draw level in the T20I series with brilliant win ?#WIvIND | ? https://t.co/Dzg9Msf5g8 pic.twitter.com/biFhqUWaD9
— ICC (@ICC) August 12, 2023
இதனால் 17 ஓவர்கள் முடிவிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 179 ஓட்டங்களை அடைந்தது.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |