இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் 16ஆம் திகதி தொடக்கம்! 75 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் கொல்கத்தாவில் பிப்ரவரி 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளை காண 75 % வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதும் மூன்று டி 20 போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பிப்ரவரி 16 திகதி நடைபெறவுள்ளது. இந்தியா அணி ரோஹித் ஷர்மா தலைமையிலும் , வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேன் பொல்லார்ட் தலைமையிலும் மோதவுள்ளனர். இந்த போட்டிக்கான பார்வையாளர்களை எத்தனை சதவிகிதம் அனுமதிப்பது என்பது குறித்து, கொல்கத்தா கிரிக்கெட் கவுன்சில் மேற்கு வங்க அரசிடம் முறையீட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த மேற்குவங்க அரசு, உள் மற்றும் வெளிப்புற விளையாட்டுகளுக்கு 75% வரை பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கொல்கத்தா கிரிக்கெட் கவுன்சில் Avishek Dalmiya நன்றி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மொத்தம் 50,000 பார்வையாளர்கள் இருக்கைகள் கொண்டது. கடந்த ஆண்டு இந்தியா, நியூசிலாந்து இடையே நடைபெற்ற போட்டிகளுக்கு 50% வரை கொல்கத்தா அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணைகளின் படி வெஸ்ட் இண்டீஸ் எதிரான 3 ஒருநாள் போட்டிகள் Ahmedabad, Jaipur மற்றும் Kolkata ஆகிய மைதானத்திலும், டி 20 தொடர் Cuttack, Visakhapatnam மற்றும் Thiruvananthapuram ஆகிய மூன்று மைதானத்தில் நடைபெருந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக Kolkata மற்றும் Ahmedabad ஆகிய மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
டி 20 தொடர்க்கு முன்பாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 6ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.