இங்கிலாந்துடனான தோல்வியின் போது இதை கவனிச்சீங்களா? இந்தியாவின் பரிதாப நிலையை காட்டும் புள்ளி விவரம்
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் பேட்டிங் வரிசை எந்தளவிற்கு மோசமாக உள்ளது என்ற புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
லீட்சில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் வலுவான நிலையில், இருந்த இந்தியா அதன் பின் அடுத்தடுத்த விக்கெட்டுகளால், படு தோல்வியை சந்தித்தது.
இது குறித்து சில புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணி இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது முதல் 2 விக்கெட்டிற்கு 21 ஓட்டங்களை எடுத்திருந்தது. அதன் பின், அடுத்த 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெறும் 58 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 79 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
முதல் இன்னிங்ஸில் தான் இப்படி என்று பார்த்தால், இரண்டாவது இன்னிங்சில் ரோகித், புஜாரா, கோலி ஆகியோர் சிறப்பாக விளையாட ஒரு கட்டத்தில் இந்திய அணி 215 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் என்ற பலமான நிலையில் இருந்தது.
ஆனால் பின்னர் மீதமுள்ள 8 விக்கெட்டுகளும் 63 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, இந்திய அணி 278 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பின்வரிசை பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது என்பதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகிறது.
இதில் பின்வரிசை வீரர்களில் யாரேனும் இரண்டு பேர் இங்கிலாந்து மண்ணில் நன்றாக நிலைத்துவிட்டால் இந்தியா அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ஏனெனில், தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் வரிசை மிகவும் பலமாக மாறிவிட்டதால், அதற்கு ஏற்ற வகையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையும் இருக்க வேண்டும் என்பது அவசியம்.