அசுரவேகத்தில் டைரக்ட்-ஹிட் அடித்த நிக்கோலஸ் பூரன்., ரன்-அவுட் ஆன சுப்மன் கில்! வைரல் வீடியோ
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் நிக்கோலஸ் பூரனின் அசுரவேக டைரக்ட்-ஹிட்டில் சுப்மன் கில் ரன்-அவுட் ஆன சுவாரசியமான வீடியோ வைரலாகிவருகிறது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது. இப்போட்டியில், கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை வெற்றியுடன் துவக்கியது.
இப்போட்டியில், நாணயசுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் கேப்டன் நிக்கோலஸ் பூரன், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் ஆகியோர் துவக்கவீரர்களாக களமிறங்கி நல்ல துவக்கம் கொடுத்தனர். அபாரமாக ஆடிய சுப்மன் கில், 36 பந்தில் அரைசதம் எட்டினார். மறுமுனையில் அசத்திய தவான், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடி 119 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், 18-வது ஓவரில் அல்ஸாரி ஜோசப் வீசிய நான்காவது பந்தில், நிக்கோலஸ் பூரனின் டைரக்ட்-ஹிட்டில் சுப்மன் கில் ரன்-அவுட் ஆனார். சுப்மன் கில் 2 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் மொத்தம் 64 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தனது அணிக்கு முதல் விக்கெட்டை சேர்ப்பதற்காக, தனது கையில் கிடைத்த பந்தை வெறித்தனமாக ஸ்டம்பை நோக்கி ஏறிய, அது டைரக்ட் ஹிட்டாகி தெறிக்க, கண்ணசரும் நொடியில் சுப்மன் கில் அவுட்டானார். சுவாரசியமான இந்த தருணத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Direct hit from @nicholas_47, and @ShubmanGill perishes. Big blow.
— FanCode (@FanCode) July 22, 2022
Watch the India tour of West Indies LIVE, exclusively on #FanCode ?https://t.co/RCdQk12YsM@windiescricket @BCCI#WIvIND #INDvsWIonFanCode pic.twitter.com/rfZXKlAnAF
இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் ஷிக்கர் தவான் 97 ஓட்டங்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். ஸ்ரேயாஸ் 54 ஓட்டங்கள், சூர்யகுமார் யாதவ் (13), சஞ்சு சாம்சன் (12), தீபக் ஹூடா (27), அக்சர் படேல் 21 ஓட்டங்களை எடுத்தனர். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 308 ஓட்டங்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. அந்த அணியின் ஷாய் ஹாப்(7), புரூக்ஸ்(46), மேயர்ஸ்(75), பிராண்டன் கிங்(54), பூரன் (25), ரோவ்மன் பவல் 6 ஓட்டங்கள் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அகீல் ஹூசைன் (32*), ஷெப்பர்டு (39*) அதிரடியாக விளையாடி வெற்றியை நெருங்கினர். கடைசி பந்தில் 6 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி, 4 ஓட்டங்கள் அடித்தால் சூப்பர் ஓவர் என்ற நிலை இருந்தபோது, அபாரமாக பந்து வீசிய சிராஜ் 1 ஓட்டம் மட்டுமே கொடுத்தார்.
இதனால் இந்திய அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் துவக்கியது. ஆட்ட நாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்.