வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட்வாஷ் செய்தது இந்தியா! தெறிக்கவிட்ட ஷிகர் தவான் படை
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களம்கண்டது.
Associated Press
தவான், சுப்மன் கில் கூட்டணி சிறப்பான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. 22வது ஓவர் வரை இந்தக் கூட்டணி நீடித்தது. இருவருமே அரை சதம் கடந்த நிலையில் முதல் விக்கெட்டாக தவண் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் ஐயரும் கில் உடன் இணைந்து கூட்டணி அமைத்தார். ஷ்ரேயாஸ் அதிரடியாகவும் விளையாட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த அவர், ஆட்டமிழக்க அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ் நிலைக்க தவறினார்.
யாதவ் 8 ரன்களில் நடையைக் கட்டினார். எனினும் மறுமுனையில் இருந்த சுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 98 ரன்கள் எடுத்திருந்தார். 98 ரன்களை தொட்டபோது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ய டக்வொர்த் முறைப்படி இந்திய அணியின் இன்னிங்ஸ் 36 ஓவர்களிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.
இதனால் கில் சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவியது. 36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டு இழப்புக்கு 225 ரன்கள் இந்திய அணி எடுத்திருந்தாலும், டக்வொர்த் முறைப்படி அதே 36 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 256 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
For his impressive 98* in the third #WIvIND ODI, @ShubmanGill wins the Player of the Match award as #TeamIndia complete the 3-0 cleansweep in the series. ? ?
— BCCI (@BCCI) July 27, 2022
Scorecard ? https://t.co/KZQ1JezKDK pic.twitter.com/zGiPeRPsh6
ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார் முகமது சிராஜ். முதல் பந்தில் கைல் மேயர்ஸ் மூன்றாவது பந்தில் ஷமர் ப்ரூக்ஸ் என இருவரை பூஜ்யத்தில் சிராஜ் அவுட் ஆக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி நிலைகுலைந்தது. சாய் ஹோப் மற்றும் பிரண்டன் கிங் இருவரும் நம்பிக்கை கொடுத்தாலும், விரைவாகவே இவர்களையும் இந்திய வீரர்கள் ஆட்டமிழக்க செய்தனர்.
இதையடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழ, கடைசி நேரத்தில் டெயிலண்டர்கள் விக்கெட்டை சஹால் சீக்கிரமாகவே வீழ்த்தினார். இதனால், 26 ஓவர்களில் 137 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் தொடரை மொத்தமாக வென்றது.
???? ??????? ???????! ?
— BCCI (@BCCI) July 27, 2022
Congratulations #TeamIndia on winning the #WIvIND ODI series! ? ?
Over to T20Is now! ? ? pic.twitter.com/kpMx015pG1