வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!
அகமதாபாத்தில் நடந்த 3வது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி வாகை சூடி ஒரு நாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
ஏற்கனவே, 2-0 என ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுவிட்ட நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பந்து வீச்சில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
266 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மளமளவென அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 169 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியா தரப்பில் பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
WHAT. A. WIN! ? ?@prasidh43 gets the last West Indies wicket & @imVkohli takes the catch as the @ImRo45-led #TeamIndia win the third @Paytm #INDvWI ODI by 96 runs to complete the series sweep. ? ?
— BCCI (@BCCI) February 11, 2022
Scorecard ▶️ https://t.co/9pGAfWtQZV pic.twitter.com/bR7KzaBTDx
வெஸ்ட் இண்டீஸை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது.
ஒரு நாள் தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத இருக்கின்றன.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பிப்ரவரி 16ம் திகதி கொல்கத்தாவில் நடக்கவிருக்கிறது.