இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அதேநிலை இந்தியாவிற்கு ஏற்படும்! சீமான் எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்படலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த போட்டியில் சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பேட்டியில் சீமான் கூறியதாவது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் எதிர்பார்த்ததுதான். அதேநிலைமைக்கு நாமும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவில் அந்த நிலை ஏற்படலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்குதான் கொண்டுபோய் நிறுத்தும்.
இலங்கையின் நிலை நமக்கு ஒரு படிப்பினைதான். பெட்ரோலியப் பொருட்கள், சுங்கக் கட்டணம் போன்றவற்றின் உயர்வால் பால், அரிசி, முட்டை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அடக்க விலை அதிகரிக்கும்.
வெறும் 226 பேர் இலங்கையை மண்டியிட வைத்துவிட்டனர்! நேரலையில் கொந்தளித்த சங்கக்காரா
விலைவாசி மேலும் உயரும். குடும்பச் செலவு இரண்டு மடங்காகும். பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டது என்கிறது தமிழக அரசு.
சொத்து வரியை தமிழக அரசு உயர்த்திவிட்டது என்கிறது மத்திய அரசு. இப்படி பேசிப் பேசியே எங்கே போய் இவர்கள் நிறுத்துவார்கள் என்றே தெரியவில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.