இலங்கை ஜனாதிபதியின் நகர்வுகளை உண்ணிப்பாக நோட்டமிடும் இந்தியாவின் அடுத்த நகர்வு என்ன?
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திஸாநாயகவின் நகர்வுகள் தொடர்பில் இந்தியா மிக நெருக்கமாக அவதானித்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியில் ஒளிப்பரப்பாகும் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதை சுட்டிக்காட்டினார்.
முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ”தான் அரசியலில் நேரடியாக ஈடுபட போவதில்லை”என அறிவித்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியினுடைய ஆதரவாளர்கள் பெரும்பாலும் சஜித் பிரேமதாச பக்கம் செல்ல நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திஸாநாயக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்லில் இடதுசாரி, கம்யூனிசம் மற்றும் சோசலிசம் தொடர்பில் அதிகம் கலந்துரையாடல் மேற்கொள்ளாமையே அவரது வெற்றிக்கு காரணம் எனவும் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறிய விடயங்கள் குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள கீழ் காணும் வீடியோவை முழுமையாக பார்வையிடவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |