உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி: அரையிறுதி கனவு தக்கவைப்பு
நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் பெண்கள் உலக கோப்பை போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்தின், ஹாமில்டன் பகுதியில் உள்ள செடான் பார்க் என்ற மைதானத்தில் இன்று (செய்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்தியா பங்களாதேஷ் இடையிலான உலகக்கோப்பை போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 7 விக்கெட்களை இழந்து 229 ரன்களை குவித்து முதல் பகுதி ஆட்டத்தை முடிவு செய்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் மகளிர் அணி இந்திய மகளிர் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 119 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகளில் வெற்றியையும் மூன்று போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது, மேலும் பங்களாதேஷ் அணியுடனான இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அவுஸ்திரேலிய அணியுடன் இந்திய மகளிர் அணி கடந்த போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் அரையிறுதி ஆட்டங்களுக்கான வாய்ப்பை சிறிது இழந்த நிலையில் பங்களாதேஷ் அணியுடன் இந்த மிகப்பெரிய ரன் வித்தியாசங்கள் கொண்ட வெற்றியின் மூலம் மீண்டும் அரையிறுதி ஆட்டங்களுக்கான வாய்ப்பை இந்திய மகளிர் அணி தக்கவைத்துள்ளது.
இதையடுத்து, இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியை தென் ஆப்பிரிக்க அணியுடன் வரும் 27ம் திகதி கிறிஸ்ட்சர்க் பகுதியில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
ஐபிஎல் 2022! முதல் போட்டியில் CSK அணிக்காக விளையாடும் ப்ளேயிங் 11... கசிந்த பட்டியல்