ட்ராவில் முடிந்த 4வது டெஸ்ட் போட்டி: உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா தெரிவானது எப்படி?
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்ததால் இந்திய அணி தொடரை வென்றுள்ளது.
4வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி 9ஆம் திகதி தொடங்கியது.
முதல் 3 போட்டிகளில் இந்தியா 2 வெற்றி பெற்று முன்னிலையிலிருந்தது. இந்தநிலையில் 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தான் உலக கோப்பை இறுதிச் சுற்றுக்குத் தேர்வாக முடியும் என்ற சூழல் இந்தியாவுக்கு இருந்தது.
@cricbuzz
எனவே இந்தியா ஜெயித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 480 ஓட்டங்களைக் குவித்தது. மிகவும் சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினார்கள்.
@cricbuzz
விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தால் இந்திய அணி 571 ஓட்டங்களைக் குவித்தது.
2வது இன்னிங்ஸ்
5வது நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 175 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. அவுஸ்திரேலிய அணி டிக்ளர் அறிவித்ததால் போட்டி சமனில் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
@cricbuzz
இந்த போட்டியில் வென்றால் மட்டுமே உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆட முடியும் என்ற நிலையில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆனாலும் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை வென்றால் மூன்றாவது இடத்திலிருக்கும் இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பு என்ற நிலை இருந்தது.
@cricbuzz
ஆனால் இன்று நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோற்றதால், இந்திய அணி அவுஸ்திரேலியாவுடன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றது.