170 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! 402 ஓட்டங்கள் குவித்து இந்தியா சாதனை
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கில் 154, இஷான் 125
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லக்னோவில் நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் 402 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அணித்தலைவர் சுப்மன் கில் (Shubman Gill) 154 ஓட்டங்களும், இஷான் கிஷண் 125 (79) ஓட்டங்களும், ரோஹித் ஷர்மா 48 ஓட்டங்களும் விளாசினர்.
ஆப்கான் தரப்பில் நன்கேயலியே கரோட்டி 4 விக்கெட்டுகளும், ரஷீத் கான் 3 விக்கெட்டுகளும், கஸன்ஃபர் மற்றும் சஃபி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இமாலய வெற்றி
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 232 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ரஹ்மத் ஷா 79 ஓட்டங்கள் குவித்தார். அர்ஷ்தீப் சிங், குர்நூர் பிரார் தலா 3 விக்கெட்டுகளும், பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்திய அணி 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்திய அணி 402 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 400 ஓட்டங்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. இரு அணிகளும் 8 முறை இந்த இலக்கினை எட்டியுள்ளன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |