இந்தியா அசால்ட் வெற்றி! இங்கிலாந்தை கிழித்து தொங்கவிட்ட இஷான் கிஷன்-கே.எல்.ராகுல்
உலகக்கோப்பை தொடரின், இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக்கோப்பை டி20 தொடர் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான குவாலியபயர் போட்டிகளில் ஓமனிலும், பயிற்சி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்று வருகிறது.
அதன் படி இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சி போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் ஜோசன் ராய் 17 ஓட்டங்கள், ஜோஸ் பட்லர் 18 ஓட்டங்கள், இவர்களைத் தொடர்ந்து வந்த டேவிட் மலான் 18 ஓட்டங்களிலும் பவுலியன் திரும்ப, ஜான் பேர்ஸ்டோவ் மற்றும் லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகப்ட்சமாக பேர்ஸ்டோவ் 49 ஓட்டங்களும், லிவிங்ஸ்டன் 30 ஓட்டங்களும், கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மோயின் அலி 43 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை இருவருமே அடித்து நொறுக்கியதால், இந்திய அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் எகிறியது. கே.எல்.ராகுல் 51 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, அதன் பின்னும் இஷான் கிஷன் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை விடவில்லை.
அவர் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்து, 70 ஓட்டங்களில் பவுலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பாண்ட் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாட இறுதியாக இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 19 ஓவர் முடிவில் 192 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
19 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.