கில் தலைமையில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா! புதிய சாதனை
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது.
கே.எல்.ராகுல் அபார ஆட்டம்
டெல்லியில் நடந்த கடைசி டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி 121 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
On the charge! 👊
— BCCI (@BCCI) October 14, 2025
KL Rahul shows his class with a couple of lovely hits! 👌
Updates ▶ https://t.co/GYLslRyLf8#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @klrahul pic.twitter.com/czUtnYtvQm
நேற்றைய 4வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டுக்கு 63 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் சாய் சுதர்சன் (Sai Sudharsan) 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த அணித்தலைவர் சுப்மன் கில் 13 ஓட்டங்களில் சேஸ் ஓவரில் அவுட் ஆனார். எனினும் கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி 58 ஓட்டங்கள் எடுக்க இந்திய அணி வெற்றி பெற்றது.
சாதனை வெற்றி
இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா, ஓர் அணிக்கு எதிராக (மேற்கிந்திய தீவுகள்) அதிகமுறை தொடர்களை (10) வென்ற அணி என்ற சாதனையை செய்தது.
இதற்கு முன் தென் ஆப்பிரிக்க அணி 10 முறை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றி இருந்தது.
இந்த சாதனைப் பட்டியலில் அவுஸ்திரேலியா (9), இலங்கை (8) அணிகள் உள்ளன.
மேலும் இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |