AsianGames 2023: டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரோகன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே ஜோடி தங்கம் வென்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டி
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19 -வது ஆசிய போட்டியானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா சார்பில் ரோஹன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே ஜோடி விளையாடினர். இவர்களுக்கு எதிராக தைவானைச் சேர்ந்த என்-சுவோ, சுங்-ஹாவ் ஜோடி விளையாடினார்கள்.
தங்கம் வென்ற இந்தியா
இதில், முதல் செட்டில் இந்தியா 2 புள்ளிகளும், தைவான் 6 புள்ளிகளும் எடுத்தது. பின்பு, சுதாரித்துக் கொண்ட இந்தியா இரண்டு மற்றும் மூன்றாவது செட்டில் 6 மற்றும் 10 புள்ளிகளும், தைவான் 3 மற்றும் 4 புள்ளிகளும் எடுத்தது.
2 செட்டுகளில் இந்தியா முன்னைலை பெற்று தங்கத்தை கைப்பற்றி சென்றது. இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா 9 தங்கம் மற்றும் 13 வெள்ளி, 13 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது.
Another feather to our glorious medal tally in the #AsianGames.
— Amit Shah (@AmitShah) September 30, 2023
Kudos to @RutujaBhosale12 and @rohanbopanna for winning the🥇Gold Medal, in Tennis Mixed Doubles event. The nation celebrates the victory achieved by the duo and eagerly anticipates more moments of glory to come. pic.twitter.com/Jxh9z6IVpz
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |