ஆசிய கோப்பையில் இருந்து விலகும் இந்தியா - பின்னணி என்ன?
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளையும் புறக்கணிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
ஆசிய கோப்பை 2025
ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண்களுக்கான ஆசிய கோப்பையும், அடுத்த மாதம் மகளிர் ஆசிய கோப்பையும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் இருந்து விலகும் முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணி என்ன?
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இருப்பதால், பாகிஸ்தானை கிரிக்கெட்டில் இருந்து தனிமைப்படுத்தும் நோக்கில் பிசிசிஐ இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
சர்வதேச போட்டிகளின் ஸ்பான்சர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருப்பதால், இந்தியா தொடரில் இருந்து விலகினால் அது பெரும் இழப்பை ஏற்படுத்தும். அதனால் ஆசிய கோப்பை ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை. கடந்த 2023 ஆசிய கோப்பை தொடரில், இந்தியா விளையாடும் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டது.
பகல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு, உலக அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளில் இந்தியா இறங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |