முதல் சதத்தை பதிவு செய்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்: 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
370 ஓட்டங்கள் குவித்த இந்தியா
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 370 ஓட்டங்கள் குவித்து அசத்தியுள்ளது.
Half-century for Harleen Deol ✅
— BCCI Women (@BCCIWomen) January 12, 2025
Half-century for Jemimah Rodrigues ✅#TeamIndia gear up for a strong finish!
Updates ▶️ https://t.co/zjr6BQy41a#INDvIRE | @IDFCFirstBank pic.twitter.com/ZDU7yjoLSk
47 ஆண்டுகால ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது முதல் 370+ ஓட்டங்களை குவித்துள்ளது.
இந்த போட்டியில் முன்னணி வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 73 ஓட்டங்களும், பிரதிகா ராவல் 67 ஓட்டங்களும், ஹர்லீன் தியோல் 89 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் முதல் சதம்
இந்த போட்டியில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
Jemimah Rodrigues celebrates her maiden ODI century with a guitar celebration! 🎸#INDvIRE pic.twitter.com/L9tKXU3RY4
— OneCricket (@OneCricketApp) January 12, 2025
91 பந்துகளை எதிர்கொண்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ் 102 ஓட்டங்களை குவித்து கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்திய அணி அபார வெற்றி!
371 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பு 254 ஓட்டங்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியுள்ளது.
भारत को एक के बाद एक लगातार दो सफलताएं मिली हैं
— ESPNcricinfo हिंदी (@CricinfoHindi) January 12, 2025
लाइव : https://t.co/S6FqeBjtWH #INDvsIRE #INDWvsIREWpic.twitter.com/LEsWglhtPj
அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக கூல்டர் ரெய்லி (Coulter Reilly) 80 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்காக போராடினார்.
இறுதியில் அயர்லாந்து அணியை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |