அவுஸ்திரேலியா நிர்ணயித்த 363 ஓட்டங்கள் இலக்கு: சேஸிங் செய்த இந்திய மகளிர் அணி
India women a team won odi series vs australia: இந்திய மகளிர் ஏ அணி 363 ஓட்டங்கள் இலக்கினை 48.2 ஓவர்களில் சேஸிங் செய்தது.
அவுஸ்திரேலியா மகளிர் ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 363 ஓட்டங்கள் இலக்கினை இந்திய மகளிர் ஏ அணி 48.2 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது.
சார்லி நாட் சதம்
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் ஏ அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மொஹாலியில் நடந்தது.

முதலில் ஆடிய அவுஸ்திரேலியா மகளிர் ஏ அணி 50 ஓவர்களில் 362 ஓட்டங்கள் குவித்தது. சார்லி நாட் 109 (70) ஓட்டங்களும், கார்ட்னி வெப் 95 ஓட்டங்களும் விளாசினர்.
இந்திய அணியின் தரப்பில் வைஷ்ணவி ஷர்மா, நிக்கி பிரசாத் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அபார வெற்றி
பின்னர் ஆடிய இந்திய மகளிர் ஏ அணி, 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 364 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
மின்னு மணி ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 88 ஓட்டங்களும், நிக்கி பிரசாத் 76 ஓட்டங்களும், தனிஷா சிங் 60 ஓட்டங்களும் விளாசினர்.
