121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி: ஜிம்பாப்வேயை சிதைத்த வைஷ்ணவி
india women beat zimbabwe women by 121 runs: ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
வதோராவில் நடந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே மகளிர் அணியை வீழ்த்தியது.
ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா சதம்
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வதோராவில் நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 328 ஓட்டங்கள் குவித்தது. ஹர்மன்பிரீத் கவுர் 126 ஓட்டங்களும், தீப்தி ஷர்மா 106 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 48.5 ஓவர்களில் 207 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மோடெஸ்டர் முபசிக்வா 49 ஓட்டங்களும், சிபோ முகேரி திரிபனோ 46 ஓட்டங்களும் எடுத்தனர்.
அபாரமாக பந்துவீசிய வைஷ்ணவி ஷர்மா 4 விக்கெட்டுகளும், 3 விக்கெட்டுகளும், சாயாலி, ஜின்டிமனி மற்றும் ஸ்ரீ சரணி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

