மகளிர் டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - வங்கதேசம் மோதல்
மகளிர் டி20 உலகக் கோப்பையின் 23 வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் மோதின.
மான்செஸ்டரில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் குவித்தது.
வங்கதேச அணியில் ஜெளரியா பெர்டெளஸ் 33 ஓட்டங்கள் குவித்தார். இந்திய அணியில் ராதா யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்தியா அபார வெற்றி
137 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷபாலி வெர்மா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 53 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
மற்றொரு முனையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்மூலம் இந்திய அணி 16.5 ஓவர்கள் மூடிவிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |