சிக்ஸர் அடித்து வெற்றியுடன் அரைசதம்: ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்த ஸ்மிருதி மந்தனாவின் படை
Indian women team washout zimbabwe: ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
வதோதராவில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
சுருண்ட ஜிம்பாப்வே
இந்தியா மகளிர் அணிக்கும், ஜிம்பாப்வே மகளிர் அணிக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வதோதாராவில் நடந்தது.

முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 39.5 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜோஸ்பின் கோமோ 35 ஓட்டங்கள் எடுத்தார்.
வைஷ்ணவி ஷர்மா 5 விக்கெட்டுகளும், கிராந்தி கவுட் மற்றும் சாயலி சத்காரே தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பிரதிகா, ஷபாலி அரைசதம்
பின்னர் ஆடிய இந்திய அணியில் யஸ்டிகா பாட்டியா முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
நிதானமாக ஆடிய பிரதிகா ராவல் அரைசதம் அடித்தார். அணியின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஷபாலி வெர்மா (Shafali Verma) சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்ததுடன் அரைசதமும் அடித்தார்.
பிரதிகா ராவல் (Pratika Rawal) 59 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்), ஷபாலி வெர்மா 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களும் விளாசினர்.
