அனல் பறந்த இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதல்: 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணி மோதல்
ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரில் வதோதராவில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
𝙒𝙝𝙚𝙧𝙚𝙫𝙚𝙧 𝙮𝙤𝙪 𝙗𝙤𝙬𝙡, 𝙞𝙩’𝙨 𝙝𝙚𝙖𝙙𝙞𝙣𝙜 𝙩𝙤 𝙩𝙝𝙚 𝙨𝙩𝙖𝙣𝙙𝙨 🚀
— JioCinema (@JioCinema) December 24, 2024
Watch Smriti Mandhana go all guns blazing in #INDvWI, LIVE NOW on #JioCinema & #Sports18! 👈#JioCinemaSports pic.twitter.com/fmfB0EYoQ4
தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா(Smriti Mandhana) 47 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் எடுத்தார்.
மற்றொரு தொடக்க வீரரான பிரதிகா ராவல் (Pratika Rawal) 86 பந்துகளில், 76 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
அடுத்து வந்த ஹர்லீன் தியோல் (Harleen Deol) மேற்கிந்திய தீவுகளுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார்.
MAIDEN INTERNATIONAL CENTURY FOR HARLEEN DEOL! 🇮🇳#INDvWI pic.twitter.com/NrtyOLQrLx
— Women’s CricZone (@WomensCricZone) December 24, 2024
இறுதியில் 98 பந்துகளில் பவுண்டரி அடித்து ஹர்லீன் தியோல் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ஓட்டங்கள் குவித்தது.
𝙒𝙝𝙚𝙧𝙚𝙫𝙚𝙧 𝙮𝙤𝙪 𝙗𝙤𝙬𝙡, 𝙞𝙩’𝙨 𝙝𝙚𝙖𝙙𝙞𝙣𝙜 𝙩𝙤 𝙩𝙝𝙚 𝙨𝙩𝙖𝙣𝙙𝙨 🚀
— JioCinema (@JioCinema) December 24, 2024
Watch Smriti Mandhana go all guns blazing in #INDvWI, LIVE NOW on #JioCinema & #Sports18! 👈#JioCinemaSports pic.twitter.com/fmfB0EYoQ4
அபார வெற்றி
கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஹேலி மேத்யூஸ்(Hayley Matthews) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
109 பந்துகளை எதிர்கொண்ட ஹேலி மேத்யூஸ் பொறுப்புடன் விளையாடி 106 ஓட்டங்கள் குவித்து சதத்தை பூர்த்தி செய்தார்.
Hayley Matthews walks off to a standing ovation after a fighting knock of 106 Runs (109) 🔥#CricketTwitter #INDvWI pic.twitter.com/UChFnAPawy
— Female Cricket (@imfemalecricket) December 24, 2024
பின்னர் வந்த வீராங்கனைகள் யாரும் நிலைத்து நின்று விளையாட முடியாததால் 46.2 ஓவர்கள் முடிவிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |