காமன்வெல்த் கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி! இன்னொரு பதக்கம் உறுதி..
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்கப் போட்டிக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அரை இறுதிக்கு இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.
சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 61 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார்.
That winning moment ? #TeamIndia ??#ENGvIND #CWG2022 pic.twitter.com/SfyzexPx7M
— Doordarshan Sports (@ddsportschannel) August 6, 2022
கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் 20 ஓட்டங்களும், தீப்தி சர்மா 22 ஓட்டங்களும் அடித்தனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் அடித்தது.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் அடித்தது. அதிபட்சமாக அந்த அணி சார்பில் கேப்டன் நாட் ஸ்கிவர் 41 ஓட்டங்களும், டேனி வியாட் 35 ஓட்டங்களும், அமிஜோன்ஸ் 31 ஓட்டங்களும் அடித்தனர்.
A 'Jem' of a win that'll remain in our 'Smriti' for a long time. Beating England in August extra special ? ?? #ENGvIND #CWG2022 pic.twitter.com/dnsfKsmbLP
— Wasim Jaffer (@WasimJaffer14) August 6, 2022
இதையடுத்து இந்திய மகளிர் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து ட்விட்டரில் வாழ்த்துகள் குவிந்தன.