வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தல்
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-வங்கதேசம் மோதல்
இந்தியா-வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது.
மழை குறுக்கீடு காரணமாக ஆட்டத்தின் முதல் நாளில் இடை நிறுத்தப்பட்ட நிலையில், முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பு 107 ஓட்டங்கள் குவித்து இருந்தது.
India off the blocks quickly in the chase of 95. But Rohit Sharma is the first to depart, getting out to Mehidy Hasan Miraz.
— Cricbuzz (@cricbuzz) October 1, 2024
How many overs do you think they'll take to reach the target? ?#INDvBAN pic.twitter.com/bGbuJnQSz0
இதையடுத்து 2வது மற்றும் 3வது நாள் ஆட்டமும் மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் வங்கதேச அணி 233 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதையடுத்து 4வது நாளில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கியது.
தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ஓட்டமும், ரோகித் சர்மா 11 பந்துகளில் 23 ஓட்டமும் குவித்து எதிரணியை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
Jasprit Bumrah at his dexterous best?The slower one doing the trick?#INDvsBAN | #TestCricket pic.twitter.com/ghcWkdT8ab
— Cricket.com (@weRcricket) October 1, 2024
பின்னர் வந்து சுப்மன் கில் (39), விராட் கோலி(47), ராகுல் (68) என குறைந்த பந்துகளில் ஓட்டங்களை வேகமாக குவிக்க இந்திய அணி 34 ஓவர்களில் 285 ஓட்டங்கள் குவித்து இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.
இந்தியா அபார வெற்றி
சவால் நிறைந்த 5வது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய வங்கதேச அணியில் விக்கெட்டுகள் மலமலவேன சரிந்தன.
தொடக்க வீரரான ஷத்மான் இஸ்லாம்(101 பந்துகளில் 50 ஓட்டம்) மட்டும் அரை சதம் கடந்தார். மிகவும் போராடிய முஷ்பிகுர் ரஹீம் 37 ஓட்டங்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் வங்கதேச அணி தங்களது இரண்டாவது இன்னிங்சின் இறுதியில் 146 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
Rohit Sharma at the age of 37 is the most destructive and dominating player with the bat as well as while fielding ??
— Richard Kettleborough (@RichKettle07) September 30, 2024
The One Hand Grab is just Phenomenal ? @ImRo45#INDvsBAN #INDvBAN#indvsbangladesh #RohitSharma?pic.twitter.com/AQd4Ay1BU9
சொற்ப ஓட்டங்களுடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 45 பந்துகளில் 51 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.
பின்னர் வந்த கோலி, தன்னுடைய பங்கிற்கு ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில் 17.2 ஓவர்கள் முடிவிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 98 ஓட்டங்கள் குவித்து இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
2️⃣ - 0️⃣
— OneCricket (@OneCricketApp) October 1, 2024
India whitewash Bangladesh and continue their domination at home! ??#INDvsBAN #TeamIndia #KanpurTest pic.twitter.com/WTkHFgtauM
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம் இந்தியா இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |